Tap to Read ➤

மீட்புப் பணிக்கு உதவும் பறக்கும் 'ஜெட் சூட்கள்'

இங்கிலாந்தில் மீட்புப் பணிக்காக பறக்கும் 'ஜெட் சூட்கள்' தயாரிக்கப்பட்டுள்ளன.
HTML Tamil
உயரமான மலைப்பகுதியில் விபத்துக்கள் ஏற்பட்டால், அதில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் என்பது கடும் சவாலானதாகும்.
மேலும், மீட்புப் பணிகளில் காலதாமதம் ஏற்படுவதால், அசம்பாவித சம்பவங்களும் நிகழ அதிக வாய்ப்புகள் ஏற்படுகிறது.
இதனை சமாளிக்கும் வகையில், இங்கிலாந்தில் பறக்கும் பிரத்யேக ஜெட் சூட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
மலைப்பிரதேசங்களில் விபத்தில் சிக்கியவர்களை விரைந்து மீட்பதற்காக, இந்த பறக்கும் ஜெட் சூட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கடுமையான காற்று மற்றும் மழை பெய்யும் சமயங்களிலும், ஜெட் சூட்கள் மூலம் வானில் பறந்தபடி குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து செல்ல முடியும்.
மலைப் பகுதிகள் மட்டும் அல்லாமல் கடல் பகுதிகளிலும் இந்த ஜெட் சூட்டுகளை அணிந்து, வீரர்கள் குறிப்பிட்ட இலக்கை விரைவாக அடைய முடியும்.
இரு கைகள் மற்றும் முதுகில் பொருத்தப்பட்ட டர்பைனில் இருந்து வெளிப்படும் உந்து விசையின் மூலம் வானில் பறக்க முடியும்.
ஜெட் சூட்டுகள் மூலம் மீட்புப் பணிகளை, சிக்கனமாக முறையில் மேற்கொள்ள முடியும் என்றும் இதனை தயாரித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மணிக்கு 128 கிலோ மீட்டர் வேகத்தில் 12,000 அடி உயரம் வரை இந்த ஜெட் சூட்டுகளை பயன்படுத்தி வானில் பறக்க முடியும் என கூறப்படுகிறது.
இந்த அதிநவீன ஜெட் சூட்டுகளை பயன்படுத்தி, மலைப்பகுதிகள் மற்றும் கடல் பகுதிகளில் விபத்தில் சிக்கியவர்களை விரைந்து மீட்க முடியும்.