Tap to Read ➤

டிஸ்னி ஹாட்ஸ்டார் ரீசார்ஜுக்கான 12 பிளான்களை நீக்கிய ஜியோ !!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் இணைந்த 2 ப்ரீபெய்ட் திட்டங்கள் !!
Sidhanathan K
ரிலையன்ஸ் ஜியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் கூட்டுசேர்ந்து, OTT நன்மையுடன் பல புதிய ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டு வந்தது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை இலவசமாக வழங்கிய 12 மொபைல் திட்டங்களை நீக்கிவிட்டு, இரண்டு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் திட்டங்களை மட்டுமே வைத்துள்ளது.
எந்த வித அறிவிப்புமின்றி சைலன்ட்டாக நிறுத்தப்பட்டுள்ள இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் ஆனது ரூ.151 முதல் தொடங்கி ரூ.3,119 வரை செல்கின்றன.
தற்போது மீதமுள்ள இரண்டு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலை ரூ 1,499 மற்றும் ரூ.4,199 ஆகும்.
இந்த 2 பிளான்களும் ஒரு ஆண்டிற்கான Disney+ Hotstar ப்ரீமியம் சந்தாவை இலவசமாக வழங்குகிறது.
இது தவிர ரூ.1499 திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் ரூ.4199 திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா மற்றும் 365 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் கிடைக்கும்.
நீக்கப்பட்ட திட்டங்களில் ரூ.155, ரூ.333, ரூ.499, ரூ.555, ரூ.583, ரூ.601, ரூ.659, ரூ.783, ரூ.799, ரூ.1066, ரூ.2999 மற்றும் ரூ.3119 திட்டங்கள் அடங்கும்.