Tap to Read ➤

கண் திருஷ்டியை கழிப்பது எப்படி?

கஷ்டம் நீங்க இதை செய்யுங்கள் !!
Sidhanathan K
வாழ்க்கையில் கஷ்ட நஷ்டங்கள் நிறைய இருக்கும்.
அதிலும் சிலருக்கு சந்தோஷம் என்பது எட்டி கூட பார்க்காது.
இன்னும் ஒரு சிலர் வாழ்க்கையில் பெரிய கஷ்டத்தை சுமந்து கொண்டு இருப்பார்கள்.
இதற்கெல்லாம் சந்தோசமாக இருந்த சமயத்தில் பட்ட கண் திருஷ்டி தான்.
இந்த கஷ்டங்களெல்லாம் கண் திருஸ்டி தான் என்று கூட சிலருக்கு தெரியாது. அதில் நம்பிக்கையும் இருக்காது.
அவ்வாறு நம்பிக்கை இருப்பவர்கள் இந்த சுலபமான பரிகாரத்தை மாதம் ஒரு முறை செய்து பார்க்கலாம்.
அம்மாவாசை, ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, இரவு 9 மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
ஒரு கைப்பிடி கல் உப்பு, 3 வரமிளகாய், ஒரு கைப்பிடி வெண்கடுகு, கட்டி கற்பூரம் ஆகியவற்றை ஒரு சிறிய வெள்ளை துணியில் போட்டு முடிச்சு போடவும்.
இதை எடுத்து வீட்டில் உள்ளவர்களை கிழக்கு முகமாக அமர வைத்து இடது வலமாக மூன்று முறை தலையை சுற்றி மற்றும் உடலில் ஏற்ற இறக்கமாக சுற்றி திருஷ்டி கழிக்க வேண்டும்.
தேங்காய் மூடி (கொட்டாங்குச்சி)-இல் ஒரு கற்பூரத்தை போட்டு தீ மூட்டி திருஷ்டி கழித்த அந்த பொருளை நெருப்பில் போட்டு எரிக்க வேண்டும்.
இதை 9 மணிக்கு மேல் வாசல் வெளியில் வைத்து தான் எரிக்க வேண்டும்.
நம்பிக்கை இருப்பவர்கள் மாதம் ஒரு முறை இந்த செயலை தொடர்ந்து செய்து வர கண் திருஷ்டி நீங்கி சந்தோஷம் நிலைக்கும்.