Tap to Read ➤

கறிவேப்பிலை டீ கேள்விப்பட்டுஇருக்கீங்களா? தினமும் ஒரு கப் குடிங்க!

கறிவேப்பிலை டீயின் பலன்கள்!
varalakshmi n
நாம் சமையலுக்கு அன்றாடம் சேர்க்கும் கறிவேப்பிலை உடலில் பல மாயங்களை செய்யக்கூடியது
கறிவேப்பிலை உடலில் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பழங்காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது
கறிவேப்பிலை டீ செய்யமுறை மற்றும் அதன் பலன்களை பார்ப்போம்
ஒரு டம்ளர் நீரை ஊற்றி நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஒரு கையளவு கறிவேப்பிலையை போட்டு, அரை மணிநேரம் மூடி வைக்க வேண்டும்.
பின் அதை வடிகட்டி,சுவைக்கேற்ப தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்
முழு பலனைப் பெற வேண்டுமானால்,காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்ல பலனை பார்க்கலாம்
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்,சர்க்கரை நோய் இருந்தால்,மருத்துவரின் அனுமதியைப் பெற்று குடிக்கலாம்
குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலைப் போக்கும்,மூலம் வாய்வுத் தொல்லை பிரச்சனை நீங்கும்
கர்ப்பிணிகள் வாந்தி, குமட்டல்,காலைச்
சோர்வு போன்ற
பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்,என்னினும் மருத்துவரின் அனுமதியைப் பெற்று குடிப்பது நல்லது
பொடுகுத் தொல்லை, தலைமுடி உதிர்வு, முடி ஒல்லியாவது போன்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவுகிறது
மூலம், உடல் சுத்தமாக இருப்பதோடு, தொப்பையும் குறைவதைக் காணலாம், மன அழுத்தம் குறையும்