Tap to Read ➤

மிகவும் விலை குறைவான கவாஸாகி பைக் அறிமுகம் !!

கவாஸாகி நிறுவனத்தின் இந்த புதிய பைக்கின் விலை என்ன தெரியுமா ?
Sidhanathan K
அன்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கிற்கு போட்டியாக குறைந்த விலை பைக்கை கவாஸாகி அறிமுகப்படுத்தியுள்ளது.
வாழ்நாளில் ஒரு கவாஸாகி பைக்கையாவது வாங்கிவிட வேண்டும் என்பது பல இந்திய வாடிக்கையாளர்களின் கனவு.
ஆனால் கவாஸாகி பைக்குகள் விலை அதிகம் என்பதால் பலரால் அந்த கனவை நிறைவேற்ற முடியவில்லை.
அந்த வகையில் செப்டம்பர் 25ம் தேதி விற்பனைக்கு வந்த கவாஸாகி டபிள்யூ175 (Kawasaki W175) விலை குறைந்த ஒன்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் ஆரம்ப விலை 1.47 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பைக்கானது ஸ்டாண்டர்டு மற்றும் ஸ்பெஷல் எடிசன் என 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஸ்டான்டர்டு வேரியன்டின் விலை ரூ.1.47 லட்சமாகவும், ஸ்பெஷல் எடிஷன் வேரியன்ட்டின் விலை ரூ.1.49 லட்சமாகவும் உள்ளது.
பைக்கில், 177 சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஃப்யூயல் இன்ஜெக்டட், ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 13 பிஎஸ் பவரையும், 13.3 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.
கவாஸாகி டபிள்யூ175 பைக்கின் விலை இந்திய சந்தையில் மிகவும் குறைவாக இருப்பதற்கு மிக முக்கியமான காரணம், இந்த பைக் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதுதான்.