Tap to Read ➤

கிட்னியில் கற்களை உருவாக்கும் உணவுகள் எது?

உணவு முறை மாற்றங்கள் மூலம் கிட்னியில் கற்கள் உருவாகாமல் தடுக்கலாம்.
HTML Tamil
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பெரும் அச்சுறுத்தலாக சிறுநீரக கற்கள் இருக்கிறது.
பெண்களை விட ஆண்களுக்கே சிறுநீரக கற்கள் உருவாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சிறுநீரக கற்களை சிறிதாக இருக்கும்போதே கவனித்துவிட்டால், அதனை எளிதில் கரைத்து விடலாம்.
சிறுநீரக கற்கள் ஏற்படாமல் இருக்க உப்பு, காரம், புளி உள்ளிட்ட உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
சிப்ஸ், குளிர்பானங்கள், வெள்ளை சர்க்கரை உள்ளிட்டவற்றை தவிர்த்தால் சிறுநீரக கற்கள் ஏற்படாமல் இருக்கும்.
துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், காபி, டீ, ஐஸ் க்ரீம், உலர் பருப்புகள் உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்.
சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கவும், உருவான கற்களை அகற்றவும் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது நல்லது.
ஆரஞ்சு, மாதுளை போன்றவற்றில் சிட்ரேட் மற்றும் மக்னீசியம் காணப்படுவதால், இது சிறுநீரக கற்கள் உருவாகுவதை தடுக்கிறது.
எலுமிச்சை சாறு, தர்ப்பூசணி சாற்றை பருகி வந்தால், சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் ஏற்படாது. மேலும், சிறிய கற்கள் மற்றும் படிகங்களை இவை அகற்றவும் உதவுகிறது.
சிறுநீரகங்களில் இருக்கும் தாது உப்பு மற்றும் யூரிக் அமிலத்தை சமநிலையில் வைக்க துளசி உதவுவதால், துளசி அல்லது துளசி பொடியை தேனில் சேர்த்து சாப்பிட்டால் கிட்னி கற்கள் கரைந்து விடும்.
சிறுநீரக கட்டிகளை கரைக்கும் சிறந்த மருந்தாக வாழை தண்டு விளங்குகிறது. வாழைத்தண்டை சூப்பாகவும், உணவிலும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கிட்னி கற்கள் கரைந்துவிடும்.