Varalakshmi N       Feb 25, 2023

சாத வகைகளும் அதில் உள்ள நன்மைகளும்!

கஞ்சி சாதம் தண்ணீர் வடிக்காமல் கஞ்சியுடன் சாப்பிடுவது, உடலுக்கு ஆரோக்கியமும், உஷ்ணத்தை சம அளவில் வைத்திருக்கவும், உடல் எடை கூடும்.

மிளகு சாதம் மிளகுதூள், சிறிது நெய் சேர்த்து சாப்பிடுவதால், வயிற்று உப்பிசம், வாய்வு நீக்கும், பித்தத்தை தணிக்கும்

எலுமிச்சை சாதம் சில நேரங்களில் நாவில் ருசிரியமுடியாமல் இருக்கும்போது, எலுமிச்சை  சாதம் சாப்பிட்டால் ருசியாறிய தனத்தை மற்றும், மேலும் கண் பார்வையை  சிறக்கச்செய்யும்

புளிச்சாதம் உடல் வலியை நீக்கும், எனினும் தினசரி சாப்பிடக்கூடாது, பாலியல்  உறவுகள், முத்தமிடுதல் மூலம் பரவும் நோய் தொற்றை தடுத்து, மேகநோயை குணமாக்கும்

புணர்ப்பாக சாதம் வடித்த சாதத்தை மறுபடியும் வடித்து, கஞ்சியாகவும் சாப்பிடலாம், காய்ச்சலில் இருப்போர் இதில் உப்பு சேர்க்காமல் குடித்தால் காய்ச்சலின் வேகத்தை குறைக்கும்

தேங்காய்ப்பால் சாதம் உடலுக்கு தேவையான பலத்தை தரும், உடல் எடை கூடும், ஆனால் பித்தத்தை  அதிகமாகும்

வெண்பொங்கல் சாதம் ஜீரணசக்தியை மேம்படுத்தி, இரத்தத்தை விருத்தியடைய செய்யும்