Tap to Read ➤

மலைகளின் இளவரசி கொடைக்கானலுக்கு சுற்றுலா போகிறீர்களா?

அதன் சிறப்புகள் என்னன்னு பார்ப்போம்
HTML Tamil
உலகின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானல் தென்னிந்தியாவில் உள்ள ஒரு சிறிய மலை பகுதிகளை கொண்டதாகும்
தமிழகத்தின் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் கோடை விடுமுறையை கொண்டாட சிறந்த இடமாகும்,
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி இப்பகுதியில் பரவலாக வளர்கிறது, அதளை காண்பதற்காகவே சுற்றுலா பயணிகள் குவிகிறார்கள். கடந்த 2006ம் ஆண்டில் பூக்கள் பூத்து குலுங்கியது குறிப்பிடத்தக்கது.
ஆண்டு முழுவதும் குளிர்ச்சியான மற்றும் இதமான காலநிலையை அனுபவிக்கலாம். குறிப்பாக மார்ச் முதல் ஜூன் தொடக்கம் வரையிலான குளிர்காலம் வெகு சிறப்பாக அமையும்.
22 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இந்த மலையானது கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் (6998அடி) உயரத்தில் உள்ளது.
கோடை காலத்தில் 21 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும், மார்ச் முதல் மே மாதம் தொடக்கம் வரை செல்லலாம்,
பருவமழை காலத்தில் ஜூன் மாத இறுதியில் இருந்து ஆகஸ்ட் வரை சாரல் மழையுடன் இதமான மழை பெய்யும்
குளிர்காலமான நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை கடும் குளிர் வாட்டும், இந்த மாதங்களில் குறைந்தபட்ச 9 டிகிரி செல்சியசாகவும், அதிக பட்சம் 16 டிகிரி செல்சியசாகவும் இருக்கும்
மலையேற்றம் பயிற்சி மேற்கொள்ள குளிர்காலம் சிறந்ததாகும்