சளி, இருமல், காய்ச்சலின் போது கொள்ளு ரசம் ஒரு சூப்பர் ஹெல்த் ஆக செயல்படுகிறது. இது உடலுக்கு வெப்பம் கொடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது
தேவையானவை: புளி சிறிய லெமன் அளவு, 1 தக்காளி, 1 கப் கொள்ளு, 3 பல் பூண்டு, 1 ஸ்பூன் தனியா, மிளகு, ஜீரகம் - 1 ஸ்பூன், சின்ன வெங்காயம் -3, எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன், கடுகு, சீரகம், வெந்தயம், கருவேப்பிலை, கொத்தமல்லி -சிறிதளவு
செய்முறை: புளியும் தக்காளியும் நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும். கொள்ளுவை பொன்னிறமாக வறுத்து வைக்கவும்.
வறுத்த கொள்ளு, பூண்டு, மிளகு, ஜீரகம், தனியா, வெங்காயம், வர மிளகாய் சேர்த்து கொரகொரவென அரைக்கவும்
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், சீரகம், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். புளி தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும். பின்பு அரைத்த மசாலாவையும் சேர்த்து, 2-3 நிமிடங்கள் விட்டு இறக்கவும். இறுதியில் கொத்தமல்லி தூவி பரிமாறலாம்
கொள்ளு ரசம் சாப்பிடுவதால் உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்தும். சளி, இருமல் குறையும்
எளிமையான ரெசிபி, சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க முடியும் என்பதற்கான உதாரணம் கொள்ளு ரசம்!