கண்ணை கொத்தும் கொம்பேறி மூக்கன் பாம்பு பற்றிய தகவல்கள்!
கொடிய விஷம் கொண்ட கொம்பேறி மூக்கன் பாம்பு!
varalakshmi n
கொம்பேறிமூக்கன் பாம்புகள் மரப் பொந்துகளில் வாழக்கூடியது, இடம் தெரியாமல், சீறிப் பாயும் தொலைவில் குறிபார்த்து கண்ணை கொத்திவிடும்
இப்பாம்பு கழுத்தைவிட சற்று பெரிய தட்டையான தலையைக் கொண்டுள்ளது
பெரிய கண்களும் ஒல்லியான, நீளமான உடல், முதுகுப் பகுதியில் வெண்கல நிற பட்டைகள் அடர் கரும்பழுப்பு நிறத்திலும், வயிற்றுப் பகுதி வெளிர் பழுப்பு நிறத்திலும் இருக்கும்
ஆண் பாம்புகளைவிட பெண் பாம்புகள் சற்று பருமனாகவும், நீளமாகவும் இருக்கும்
இரவு நேரத்தில் மரத் தவளைகள், பல்லிகள், சிறு பறவைகள், ஒணான் போன்றவற்றை உணவாகக் கொள்கிறது
ஆபத்தை ஏற்படுத்தாத இந்த பாம்பு மர உச்சியில் இருந்து தாவக்கூடியது,சுறுசுறுப்பான விரைவான துணிவுடைய பாம்பு
செப்டம்பர் ,பெப்ரவரி மாதங்களுக்கு இடையே ஆறு ,ஏழு முட்டைகளை இடுகிறது, 4-6 வாரங்களுக்கு அடைகாக்கிறது பிறக்கும்போது அரையடி 4 -5 அடி நீளம்வரை வளர்கின்றன