Sidhanathan K       Feb 27, 2024

உலகின் முதல் டிரான்ஸ்ப்ரண்ட் லேப்டாப் அறிமுகம் செய்த லெனோவா..!!

உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் (WMC) இல் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்துகின்றன. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான WMC நிகழ்ச்சி ஸ்பெயினில் நடைபெறுகிறது.

அதில் லெனோவா காட்சிப்படுத்திய டிரான்ஸ்ப்ரன்ஸி லேப்டாப் ஒன்று ஒட்டுமொத்த டெக் உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த லேப்டாப்பின் டிஸ்பிளே கண்ணாடி போல டிரான்ஸ்ப்ரண்ட்டாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

லெனோவா நிறுவனம், திங்க்புக்(ThinkBook) என்கிற சீரிஸில்தான் இந்த டிரான்ஸ்ப்ரண்ட் லேப்டாப்பை வடிவமைத்திருக்கிறது. இதில் கொடுக்கப்பட்டுள்ள 17.3 இன்ச் டிஸ்பிளே 55% டிரான்ஸ்ப்ரண்ட் தன்மை கொண்டதாகும்.

அதேபோல கீ போர்டு பகுதியும் டிரான்ஸ்ப்ரண்ட்டாகவே உள்ளது. டிவி, சினிமான திரைகளுக்கு 400 நைட்ஸ் பிரைடை்னஸ் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும். இந்த லேப்டாப்பின் டிஸ்பிளேவுக்கு 1000 நைட்ஸ் பிரைடை்னஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

டிஸ்பிளே 720 பிக்சல் கொண்டதாக இருக்கிறது. ஆனால் இதற்கு AMOLED பேனல் கொடுக்கப்படாமல், அதற்கு பதிலாக மைக்ரோ எல்இடி டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வகை லேப்டாப்கள் கட்டிடகலை வடிவமைப்பாளர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதை முழுமையாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர 5 ஆண்டுகள் ஆகும் என்று லெனோவா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏனென்றால் தற்போது காட்சிப்படுத்தப்பட்டிருப்பது வெறும் மாடல்தான். எதிர்காலத்தில் இந்த புதிய டிரான்ஸ்ப்ரண்ட் லேப்டாப் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் என்று லெனோவா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories