Tap to Read ➤

டி20 உலகக் கோப்பையை வென்று மகுடம் சூடிய அணிகள்...

ஐசிசி டி20 உலகக்கோப்பையை இதுவரை வென்ற அணிகள் பற்றி பார்ப்போம்.
HTML Tamil
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் இதுவரை
7 முறை நடைபெற்றுள்ளது. இதில் 6 அணிகள் கோப்பையை வென்றுள்ளன.
ஐசிசி டி20 உலகக்கோப்பையின் 8-வது தொடர், ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுவரை நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில், எந்தெந்த அணிகள் மகுடம் சூட்டியுள்ளன என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.
தென்னாப்பிரிக்காவில் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் முறையாக ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் நடத்தப்பட்டது.
எம்.எஸ். தோனி தலைமையிலான இந்திய அணி, இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
கடந்த 2009-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில், இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது.
3-வது டி20 உலகக்கோப்பை போட்டி 2010-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியாவை தோற்கடித்து, இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.
2012-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 4-வது டி20 உலகக்கோப்பை போட்டியின் இறுதியாட்டத்தில் இலங்கையை வீழ்த்தி, வெஸ்ட் இண்டீஸ் அணி மகுடம் சூடியது
பங்களாதேஷில் 2014-ல் நடைபெற்ற 5-வது டி20 உலகக்கோப்பை போட்டித் தொடரில், இந்தியாவை தோற்கடித்து, இலங்கை அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது.
இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற 5-வது டி20 உலகக்கோப்பை போட்டியில், இங்கிலாந்தை வீழ்த்தி, வெஸ்ட் இண்டீஸ் 
2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
கடந்த 2021-ல் துபாயில் நடைபெற்ற 7-வது ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில், நியூஸிலாந்தை தோற்கடித்து, முதல் முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.