Tap to Read ➤

கண்ணாடி அணிபவர்கள் செய்ய வேண்டிய சின்னச் சின்ன விஷயங்கள்!

தொடர்ந்து இதை செய்துவந்தால் கண் பார்வை குறைபாட்டை சரிசெய்ய முடியும்!
varalakshmi n
கண்ணாடி அணிபவர்கள் மட்டுமல்ல பொதுவாக எல்லோரும் கடைபிடித்தால் கண் பார்வை குறைபாட்டை சரிசெய்ய முடியும்
கண்ணாடி அணிவதென்பது கிட்டப்பார்வை, தூரப்பார்வை என்ற இரண்டு பார்வை சம்பந்தப்பட்ட கோளாறுகளால் தான்
தலையில், மூளையில் நரம்பு பிரச்னைகளோ, தலைவலியோ இருந்தால்,பார்வைக் குறைபாடுகள் உண்டாவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகிறது
பார்வைக் கோளாறை சரி செய்யும் அரு மருந்தாக முருங்கைப் பூ பயன்படுகிறது
முருங்கைப் பூவை சுத்தமான பசும்பாலில் சேர்த்து காய்ச்சி காலையும் மாலையுமாக தினமும் இரண்டு வேளையும் குடித்து வந்தால்,கண்களில் ஈரப்பதம் அதிகமாகி, கண் பார்வை குறைபாடு நீங்கும்
முருங்கைப் பூவைவெயிலில் உலர்த்தி, காய வைத்து மலர்களைப் பொடி செய்து தேனில் கலந்து
தினமும் இரண்டு முறை காலையும் இரவும் சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து பிரச்னை குறையும்
முருங்கைப் பூவினை பசும்பாலில் சேர்த்து நன்கு கஞ்சிபோல காய்ச்சி சுவைக்காக சிறிது சீரகம், வெள்ளைப்பூண்டு, சிறிது மிளகும் சேர்த்துகுடித்துவர நல்ல பலன் தரும்
இரவு உணவுக்கு பின்பு,சில துளிகள் தண்ணீரை எடுத்து கண்களுக்கு விட்டுக் மூடி பின் சந்திர தரிசனம் செய்தால் கண்களில் உள்ள தூசியும் வெளியேறிவிடும்
வாரம் இரண்டு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்,இதனால் நரம்புகள் சூடு குறைந்து கண்கள் குளிர்ச்சி அடையும்பார்வை தெளிவாகும்
தினசரி உணவுடன் பண்ணைக் கீரை, பொன்னாங்கன்னி கீரை, சிறுகீரை, கேரட்,இரவு உணவாக பால் சாதம் சாப்பிடுவதும்,பால், பழம் இவற்றை செய்துவர வெள்ளெழுத்து பிரச்னை குறையும்
நான்கு மாதங்களுக்கு ஒரு முறையாவது வயிற்றை சுத்தம் செய்ய பேதி மருந்து எடுத்துக் கொண்டால், கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் தீரும்
எந்த மாதிரியான பேதி மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம் என்பதை மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளவும்