மெக்னீசியம் தாது நமது உடல் ஒழுங்காக செயல்பட அவசியம் ஆகும். மெக்னீசியத்தின் குறைபாடு சோர்வு, தசை பலவீனத்தை உணர வைக்கும்.
மெக்னீசியம் எலும்பு அமைப்பு மற்றும் அடர்த்தியை பராமரிக்க உதவுகிறது. அதேபோல, முன்கூட்டிய தேய்மானம், வீக்கம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தையும் குறைக்கிறது.
குளுக்கோஸ் அதிகரிப்பை கட்டுப்படுத்த மெக்னீசியம் மிக முக்கியமானது. அந்தவகையில், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.
உடலில் மெக்னீசியத்தின் உட்கொள்ளலை அதிகரிக்க விரும்பினால், இந்த குறிப்பிட்ட சில உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
பாதாம், வேர்க்கடலை, அக்ரூட் பருப்புகள், ஹேசல்நட்ஸ் மற்றும் பிஸ்தா போன்றவை மெக்னீசியம் அதிகம் உள்ள நட்ஸ் ஆகும்.
பட்டாணி நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின்களின் சிறந்த மூலமாகும். அத்துடன் மெக்னீசியம் நிறைந்துள்ளதால் உணவில் பட்டாணியை சேர்க்கலாம்.
கொண்டைக்கடலை, வெள்ளை பீன்ஸ், பருப்பு மற்றும் பீன்ஸ் ஆகிய பருப்பு வகைகள் நமக்கு அதிக அளவு மெக்னீசியத்தை வழங்குகின்றன.
முழு தானியங்கள் மெக்னீசியத்தை வழங்குவது மட்டுமல்லாமல், கொலஸ்ட்ரால், எடை மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
சியா விதைகள், ஆளி விதைகள், எள் ஆகியவை மெக்னீசியத்தின் சிறந்த ஆதாரங்கள் ஆகும். இவைகளை தயிர் அல்லது சாலட்களில் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.