Tap to Read ➤

1 மணி நேரத்தில் 249 கப்களில் தேனீர் தயாரித்து கின்னஸ் சாதனை!

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்த சாதனையை செய்து அசத்தியுள்ளார்.
HTML Tamil
எதையாவது சாதிக்க வேண்டும் என விரும்புவர்கள், அதற்காக ஒரு துறையை தேர்ந்தெடுப்பார்கள்.
சாதனைக்கான அந்த முயற்சியில் தொடர்ந்து பயணித்து, என்றாவது ஒருநாள் அந்த இலக்கை எட்டி விடுவார்கள்.
சாதனை படைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பவர்களுக்கு வெற்றிக்கான அந்த நாள் நிச்சயம் வரும்.
அந்த வகையில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், தேனீர் தயாரிக்கும் துறையில் சாதித்துள்ளார்.
இங்கார் வாலன்டின் என்ற அந்தப் பெண், 1 மணி நேரத்தில் 249 கப்களில் தேனீர் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
ஒரு மணி நேரத்தில் 150 கப்களில் தேனீர் தயாரிக்க வேண்டும் என்றே முதலில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், இங்கார் வாலன்டின், அசுர வேகத்தில் 249 கப்களில் தேனீர் தயாரித்து, அனைவரையும் பிரமிக்க வைத்தார்.
வெண்ணிலா, ஸ்டாபெரி உள்ளிட்ட பிளேவர்களில், ரூயிபோஸ் தேனீரை தயாரித்து அசத்தியுள்ளார் இங்கார் வாலன்டின்.
ஒரு மணி நேரத்தில் அதிக கப்களில் தேனீர் தயாரித்த அவருக்கு, கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் அளித்து கவுரவிக்கப்பட்டது.
தேனீர் தயாரித்து கின்னஸ் சாதனைப் படைத்த இங்கார் வாலன்னுக்கு, பாராட்டுகள் குவிந்து வருகிறது.