Sidhanathan K       Nov 27, 2023

இந்தியர்கள் மலேசியா செல்ல விசா தேவையில்லை..!

இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகள் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், தற்போது மலேசியாவும் விசா தேவையில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் மலேசியாவுக்கு சென்று வரலாம் என்றும் 30 நாட்கள் வரை மலேசியாவில் தங்கலாம் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது, மலேசியா செல்லும் போது, ​​30 நாட்களுக்கும் குறைவாக அங்கு தங்குவதாக இருந்தால், தனி விசா பெற தேவையில்லை.

அதேநேரம் ஏற்கனவே குற்றவியல் வழக்குகளை கொண்டவர்களுக்கு இது பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் விசா பெற்றே மலேசாவுக்கு செல்ல முடியும்.

முன்னதாக நவம்பர் 24ஆம் தேதி, மலேசியர்கள் 15 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று சீனா அறிவித்தது.

இந்நிலையில், சீனாவை சேர்ந்தவர்ளும் மலேசியாவிற்கு 30 நாட்கள் வரை விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories