Tap to Read ➤

பெண்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடும் அதற்கான  தீர்வும்...!

ஊட்டச்சத்து குறைபாடின்றி வாழ ஆரோக்கியமான உணவுவை எடுத்துக்கொள்ளது நல்லது.
HTML Tamil
ஊட்டச்சத்து குறைப்பாட்டால் சோர்வு, தலைசுற்றல், உணர்வின்மை, தசை பலவீனம் மற்றும் எலும்பு வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.
ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு உடனே சிகிச்சை அளிக்காவிட்டால், அது நாள்பட்ட சுகாதார நிலைமைகளுக்கு கூட வழிவகுக்கும்.
எனவே, பெண்கள் தங்கள் உணவில் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சரியான அளவுகளையும் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
பெண்களுக்கு ஏற்படும் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் உண்ணும் உணவுகள் பற்றி இப்போது பார்ப்போம்.
இரும்புச்சத்து குறைபாட்டால் இரத்த சோகை உருவாக வாய்ப்பு உள்ளது. மேலும், தலைச்சுற்றல், தீவிர சோர்வு, மூச்சுத் திணறல், நாக்கில் புண் போன்ற அறிகுறிகளும் ஏற்படும்.
இரும்புச் சத்தை பெற கடல் உணவுகள், இறைச்சி, பீன்ஸ், கீரைகள், பட்டாணி, தானியங்கள் மற்றும் திராட்சை மற்றும் பாதாமை சாப்பிடலாம்.
உடலில் கால்சியம் அளவு குறைந்தால், சோர்வு மற்றும் பலவீனம், தசைப்பிடிப்பு, தோல் பிரச்சினைகள், பல் பிரச்சினைகள் உள்ளிட்டவை ஏற்படும்.
கால்சியம் அளவை அதிகரிக்க, பால், தயிர், பாலாடைக்கட்டி, சோயாபீன்ஸ், கீரைகள் உள்ளிட்டவற்றை தினசரி உணவில் சேர்க்க வேண்டும்.
அயோடின் குறைபாட்டால் உடல் எடை அதிகரிக்கும். உடல் பலவீனம், சோர்வு, முடி உதிர்தல், குளிர் மற்றும் பிற சிக்கல்களை உணரலாம்.
உடலுக்குத் தேவையான அயோடினை பெற, பால், உப்பு, முட்டை, கோழி உள்ளிட்ட உணவுகளை பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வைட்டமின் டி குறைபாட்டால் சோர்வு, முதுகுவலி, முடி உதிர்தல், மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகள் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
வைட்டமின் டி-யை பெற மீன் மற்றும் மீன் எண்ணெய்கள், முட்டையின் மஞ்சள் கரு, காளான்கள்,  போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.