உடலுக்கு குளிர்ச்சியும், செரிமானத்திற்கு நன்மையும் தரும் பாரம்பரிய கீரை உணவுகளில் மணத்தக்காளி ரசம் முக்கியம் இடம் வகுக்கிறது.
எளிதாக செய்யக்கூடிய இந்த ரசம், சாதத்துடன் சேரும் போது சுவையும் ஆரோக்கியமும் இரட்டிப்பாகும்
மணத்தக்காளி கீரை - 1 கட்டு, தக்காளி -2, சின்ன வெங்காயம் -10, பூண்டு - 5 பல், மிளகு -1/2 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, இஞ்சி - 1 சிறிய துண்டு, நெல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி, கடுகு - தேவையான அளவு உளுந்து பருப்பு - தேவையான அளவு, உப்பு- தேவையான அளவு
முதலில் மணத்தக்காளி கீரையை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும். அதனுடன் தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து போதிய அளவு தண்ணீர் ஊற்றி வேகா வைக்கவும்.
நன்றாக வெந்ததும் அதை மிதமாக கடைந்து கூழாக்கவும். வாணலியில் நெல்லெண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் உளுந்து பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
இந்த தாளிப்பை ரசத்தில் சேர்த்து 3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும். சூடான சாதத்துடன் பரிமாறினால் சுவையான மணத்தக்காளி ரசம் தயார்