Sidhanathan K       Dec 25, 2024

மூல நோயை விரட்டியடிக்கும் மூக்கிரட்டை கீரையின் மருத்துவ பயன்கள்..!!

சிறுநீரகம் மற்றும் மூலம் ஆகிய 2 பிரச்சனைகளுக்கும் தீர்வு காண இந்த மூக்கிரட்டை கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

மூக்கிரட்டை இலையை மட்டும் எடுத்து சுத்தம் செய்து அம்மியில் வைத்து மை போல அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து வாயில் போட்டு விழுங்கி வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும்.

இப்படி காலை மாலை என தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும். அதேபோல, மூலக்கட்டி இருந்தாலும் சுருங்கி குணமாகும்.

ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி மூக்கிரட்டை கீரையுடன் அதன் தண்டுகளையும் சேர்த்து நறுக்கி, அது 1 டம்ளர் அளவு வரும்வரை சண்ட காய்ச்சி குடித்தால் சிறுநீரகத்துக்கு நல்லது.

சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும், தொற்றுநோய்கள் இருந்தாலும் மூக்கிரட்டை கீரை அதை குணப்படுத்திவிடும். 

மஞ்சள் காமலை இருப்பவர்கள் கீழாநெல்லியுடன் இந்த கீரையை சேர்த்து சாப்பிடலாம்.

மூக்கிரட்டை இலைகளை பேஸ்ட் போல அரைத்து கண்களில் தடவ கண் இமை வீக்கம் குணமாகும். மேலும், மூக்கிரட்டை வேரை உலர்த்தி பொடி செய்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் கண் நோய்கள் குணமாகும்.

இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சில மாதங்களில் உடல் எடையில் மாற்றம் காணலாம். அதேபோல, மூக்கிரட்டை பொடியானது சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.

மூக்கிரட்டை ஆனது மலட்டுத்தன்மையை நீக்கி, ஆண்மைக்குறைவு மற்றும் விறைப்புத்தன்மையை குணப்படுத்துகிறது. இதுதவிர, சில வகையான புற்றுநோய்கள் தீவிரமாவதை குறைக்க உதவுகிறது.