Tap to Read ➤

அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த வெற்றிலை!

வெற்றிலையின் மருத்துவ குணங்களையும், பயன்களையும் தெரிந்துகொள்வோம்.
HTML Tamil
தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல், மெல்லிலை போன்ற பெயர்களுடைய வெற்றிலையும், அதன் வேரும் மருத்துவ குணமுடையது.
வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி அதிகம் உள்ளன. வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் ஆற்றல் வெற்றிலைக்கு உண்டு.
வெற்றிலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சீதள நோய்களை நீக்கி, குடல் புண்களை குணப்படுத்தும் தன்மை பெற்றுள்ளது.
நச்சுக்களை வெளியேற்றும் தன்மையுடைய வெற்றிலை, அஜீரணத்தை நீக்கி, செரிமானத்திற்கு உதவுகிறது. வெற்றிலை பசியையும் தூண்டுகிறது.
கொழுந்து வெற்றிலையுடன் மிளகை சேர்த்து சாப்பிட்டால், அசிடிட்டி, செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகள் சரியாகும்.
வெற்றிலையை மெல்லுவதால், பல் ஈறுகளில் வலி, ரத்த கசிவு நீங்கும். ஆட்டம் காணும் பற்கள் கெட்டியாகும். வாய் நாற்றத்தையும் போக்குகிறது.
மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியம் தரக்கூடியது வெற்றிலை.
வெற்றிலை நரம்பு மண்டலத்திற்கு பலம் கொடுப்பதால், படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலைச் சாறு கொடுத்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
கடுகு எண்ணெயில் வெற்றிலையை சூடுபடுத்தி, ஒரு துணியில் வைத்து மார்பில் கட்டினால், மூச்சத்திணறல் மற்றும் இருமல் கட்டுப்படும்.
வெற்றிலையுடன் துளசி இலைகளையும் சேர்த்து சாறு பிழிந்து, குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல் குணமாகும்.
கொழுந்து வெற்றிலையுடன் மிளகு சேர்த்து தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைய வாய்ப்பு ஏற்படும்.