Sidhanathan K       Apr 06, 2024

அமராந்த்.. தண்டுக்கீரை விதையில் மறைந்திருக்கும் மருத்துவ பலன்கள்..!!

முளைக்கீரை வளர்ந்து பெரிதானால், அதுதான் தண்டுக்கீரை. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் சாப்பிடக்கூடிய கீரை வகையாகும்.

தண்டுக்கீரையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், இரும்புச்சத்து, புரதம், பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து, தாமிரம், சோடியம், தியாமின், கொழுப்புச் சத்துகள் நிறைந்துள்ளன.

தண்டுக்கீரை விதைகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை. இந்த விதையை ஆங்கிலத்தில் அமராந்த் என்பார்கள்.

இதில் புரதம் (Protein) மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

ஒரு கப் கீரையில் 26 கிராம் புரதம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து உள்ளது.

இரத்த சர்க்கரை அளவை ஒரே சீராக வைத்திருக்க உதவுவதால் நீரிழிவு நோய் கட்டுப்படும். கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த உதவுவதுடன், இதய ஆரோக்கியத்தையும் காக்கிறது.

தலைமுடி ஆரோக்கியத்துக்கு நல்லது. அதிலும், நரைமுடியை போக்குகிறது. எலும்புகள் உறுதிப்படும். பார்வை கூர்மையாகும். மலச்சிக்கல் மற்றும் தசைப்பிடிப்பு போன்ற பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கிறது.

மாரடைப்பு மற்றும் பக்கவாத ஆபத்தை போக்குகிறது. ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. உடலில் கொலாஜன் உற்பத்தி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது.

இந்த வெள்ளை விதையை பெரும்பாலும் கடைந்து பாலில் கலந்து குடிக்கலாம். சத்தான உணவுகளில் கலந்து சாப்பிட்டால் கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கும்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories