பார்லி என்பது அரிசி போல சிறியதாக இருக்கும். இது மேற்கு ஆசியா மற்றும் வடகிழக்கு ஆப்பிரிக்காவில் விளையக்கூடியது. இந்த பார்லி ஆனது ரொட்டி, சூப் உள்ளிட்ட உணவு பொருட்களில் சேர்க்கப்படுகிறது.
இந்த பார்லியில் விட்டமின் பி, மாங்கனீஸ், செலினீயம்,பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம், நார்ச்சத்து, துத்தநாகம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
இந்த பார்லி உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. அந்தவகையில் பார்லி கலந்த தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்ப்போம்.
ஒரு கப் பார்லியை கழுவி எடுத்து கொண்டு அதில் 7 முதல் 8 கப்புகள் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். பிறகு வெந்தவுடன் தண்ணீரை வடித்து உப்பு சேர்த்து குடிக்கலாம்.
தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த பார்லி தண்ணீர் பஞ்சாபில் மிகவும் பிரபலமான பானமாகும்.
பார்லி உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஜீரணத்தை தூண்டுகிறது. இந்த பார்லி தண்ணீர் சிறுநீர் பாதைகளில் உள்ள தொற்றுகளை நீக்கும் மாயாஜால மருந்தாகும்.
உடலில் உள்ள நச்சுகளை நீக்கி சிறுநீரை பெருக்கும் திறன் கொண்டது. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். கிட்னி கற்கள் மற்றும் நீர் கட்டிகளுக்கு சிறந்த மருந்தாகும்.
கிரியாட்டினைன் அதிகம் இருந்தால் அதை சீராக்கும் தன்மை இதற்கு உண்டு. மலச்சிக்கலை போக்குகிறது. உடல் உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்துகிறது.
பார்லியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது. கொலஸ்டிராலை குறைக்க உதவுகிறது. இந்த பார்லி ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் இதய நோய் ஏற்படுவது கணிசமாக குறைகிறது.
இந்த பார்லியில் அசிலைக் என்ற ஒரு பொருள் உள்ளதால் முகப்பருக்கள் நீங்குகின்றன. வயதாவதை தடுக்கிறது. தோலுக்கு நன்மை செய்கிறது. முகம் பொலிவடைகிறது.
கர்ப்பிணிகளுக்கு ஜீரணத்தை அதிகரித்து மலச்சிக்கலை குறைப்பதால், கர்ப்பிணிகள் இதை குடிப்பது நல்லது. மேலும், கர்ப்பிணிகளுக்கு காலையில் ஏற்படும் சோர்வுகளை நீக்குகிறது.