5 ஸ்பூன் தேன் 1 டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை கலந்து வலி உள்ள பல்லின் மீது தடவவும். வலி நிற்கும் வரை இதை தொடர்ந்து செய்து வரலாம்
இரவு படுக்குமுன் 1 டம்ளர் நீரில் தேன், பட்டை பொடி சமளவு கலந்து சிறிது நேரம் கொதிக்க விட்டு பின்பு அருந்தி வர உடல் பருமன் குறையும்
தேனை லேசாக சூடுபடுத்தி 1/4 ஸ்பூன் பட்டை பொடியுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சைனஸ் மற்றும் ஜலதோஷம் நீங்கும்
வெதுவெதுப்பான நீரில், 1 ஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் பட்டை பொடி கலந்து பேஸ்ட் போல குழைத்து முட்டு வலியுள்ள இடத்தில் மென்மையாக தேய்த்து விடவும். மூட்டு வலி குறைவதை உணரலாம்
காபிக்கு பதில் வெதுவெதுப்பான நீரில் 1/2 ஸ்பூன் தேன் கலந்து 1 சிட்டிகை பட்டை பொடி தூவி குடித்து வர நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்