கருப்பு பிசின் போன்ற பொருளான இந்த ஷிலாஜித்தை ஆயுர்வேதத்தில் எலும்பு முறிவுகள் முதல் ஆண்மைக்குறைவு வரை பல்வேறு மருத்துவ பயனுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ஷிலாஜித்தில் காணப்படும் ஷிலாஜித் பயோஆக்டிவ்(பைட்டோ காம்ப்ளக்ஸ்) சேர்மங்கள் ஃபுல்விக் மற்றும் ஹ்யூமிக் அமிலத்தால் ஆனவை என்பதால் நிறைய குணப்படுத்தும் நன்மைகளை வழங்குகிறது.
ஷிலாஜித் எடுத்துக்கொள்வது உடல் செயல்திறனை அதிகரிக்கவும், சோர்வை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
ஷிலாஜித்தில் நிறைந்திருக்கும் ஃபுல்விக் அமிலம் நினைவாற்றலை அதிகரிக்கிறது.
ஷிலாஜித் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. மேலும், இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
ஆண்களின் ஹார்மோன் ஆரோக்கியத்தை ஆதரிக்க ஷிலாஜித் பயன்படுத்தப்படுகிறது. தினமும் 100 கிராம் ஷிலாஜித்தை உட்கொள்வதால் மொத்த விந்தணுக்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க முடியும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
ஷிலாஜித்தில் உள்ள பயோஆக்டிவ் கூறுகள் கருவுறாமை மற்றும் குறைந்த விந்தணு இயக்கம் ஆகியவற்றை சிறப்பாக கையாளுகிறது. மேலும், இது ஆண்மை தன்மையை அதிகரிக்க உதவுகிறது.
இது மூட்டு வீக்கம் மற்றும் தசை வலியை போக்க உதவுகிறது.
ஷிலாஜித் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பரவலை தடுக்க பயன்படுத்தப்படுகிறது.
ஷிலாஜித்தை எடுத்துக் கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.