Sidhanathan K       Apr 01, 2024

கருங்காலி மரத்தின் மகத்தான பயன்கள் பற்றி தெரியுமா..?

மிகவும் பழமையான மர வகையை சேர்ந்த கருங்காலி மரத்தின் நடுப்பகுதி மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மரமே லட்சுமியின் அம்சமாக சொல்லப்படுகிறது.

இம்மரத்தின் நடுப்பகுதி கருமையாக இருக்கும். இதை வைத்துதான் சுவாமி சிலைகள், உலக்கை போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் செய்கிறார்கள்.

இந்த கருங்காலி மரங்கள் கதிர்வீச்சைச் சேமிக்கும் ஆற்றல் பெற்றவை. இந்த மரத்தின் வேர், பட்டை, பிசின் ஆகியவை மருந்தாக பயன்படுகிறது.

துவர்ப்பு தன்மை கொண்ட கருங்காலி மரத்தின் வேரை சுத்தம் செய்து தண்ணீரில் ஊற வைத்து, அந்த தண்ணீரை வடிகட்டி குடித்து வந்தால் வயிற்றுப்புண்கள் நீங்குவதோடு, வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்புகளும் கரைந்துவிடும்.

சர்க்கரை நோயாளிகள் இந்த நீரை தினமும் இரு வேளை அருந்தினால் போதும் சர்க்கரையின் அளவு குறையும். இரத்தத்தில் இரும்புச் சத்தை அதிகரிக்கும் தன்மை இந்த கருங்காலிக்கு உண்டு. 

கருங்காலியின் பிசினை பொடியாக்கி தினமும் பாலில் கலந்து குடித்து வந்தால் உடல் வலுப்பெறும். நீர்த்து போன விந்து கெட்டியாகும். நீர்த்துப் போன விந்துக்களில் தான் உயிரணுக்கள் அதிகம் இருக்கும்.

இரத்த போக்கு அதிகமாக உள்ள பெண்கள் இந்த பிசினை சாப்பிட்டால் பலன் கிடைக்கும். அதேபோல, பெண்களின் கர்ப்பப்பை வலுபெற உதவிபுரிகிறது. அத்துடன் பெண்களுக்கு கரு உருவாக வழி செய்கிறது.

உடலில் உள்ள தேவையற்ற கெட்ட நீரை வெளியேற்றுகிறது. வாய்ப்புண்ணை நீக்கி வாய் துர்நாற்றத்தை போக்குகிறது. இதய நோயாளிகளுக்கு அருமருந்தாகவும் உதவுகிறது.

கருங்காலி பட்டை, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் உள்ளிட்டவைகளை சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடித்தால் இருமல் நீங்கி, சுவாச நோய்களும், காசநோய்களும் ஓடிவிடும்.

இந்த கருங்காலி குச்சிகள் நேர்மறை எண்ணங்களை நம்முள் புகுத்தும். அதனால்தான் கோயில் கலசங்களில் கருங்காலி கட்டைகளை போட்டு வைப்பார்கள். இது கதிர்வீச்சுகளை தன்னுள் கிரகிக்கும் தன்மை கொண்டதால்தான் மாலைகளாக அனைவரும் அணிந்து வருகின்றனர்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories