கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம் என்ற பழமொழிக்கு ஏற்றாற்போல் கடுக்காய் பல்வேறு நோய்களை விரட்டக்கூடியது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இரவில் படுக்கும் முன் விதை நீக்கிய கடுக்காயை தண்ணீரில் போட்டு, கொதிக்கவைத்து அந்த நீரை அருந்தினால் உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் அனைத்தும் நீங்கிவிடும்.
கடுக்காய் கொண்டு செய்யப்படும் கல்பம் ஆண்-பெண் உறவை பலப்படுத்தி, குழந்தைப்பேறு தரக்கூடியதாக சொல்லப்படுகிறது.
அதேபோல கடுக்காய் லேகியம் சாப்பிடுவதால், நரைத்த தலைமுடிகூட கருகருவென வளருமாம்.
கடுக்காயில் பலவகைகள் உள்ளன. அதில் பிஞ்சுக் கடுக்காய் மலச்சிக்கலை போக்கக்கூடியது. உடலுக்கு அழகூட்டி, மெருகூட்டக்கூடியது.
செங்கடுக்காய் காசநோயை போக்கி மெலிந்த உடலை தேற்றி அழகாக்கும். அதேபோல, வரிக்கடுக்காய் விந்தணுக்களை அதிகரிக்கச் செய்யும்.
கடுக்காய்த்தூளுடன் சிறிதளவு சோம்பு சேர்த்து மண் சட்டியில் தண்ணீர்விட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி, அதனுடன் சுத்தமான தேன் கலந்து தினமும் 2 வேளை குடித்துவந்தால் உடல் எடை குறையும்.
மூன்று கடுக்காய் தோல்களுடன் தேவையான அளவு இஞ்சி, மிளகாய், புளி, உளுந்து சேர்த்து நெய்யில் வதக்கி உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டுவந்தால் செரிமான சக்தி அதிகரிப்பதோடு, மலச்சிக்கல் விலகும்.
இப்படி பல்வேறு நோய்களை குணப்படுத்தும் கடுக்காய், உடல் பலவீனத்தை போக்கி, ஆண்களின் உயிரணு குறைபாடுகளை நீக்கி என்றும் இளமையான தோற்றத்தை தரும்.