விலை மலிவாக கிடைக்கும் இந்த பனங்கிழங்கு மார்கழி முதல் மாசி மாதம் வரையிலான கால கட்டங்களில் அதிகமாகவே கிடைக்கும்.
இந்த கிழங்கில் வைட்டமின் பி மற்றும் சி உள்ளது. 100 கிராம் பனங்கிழங்கில் 87 கி கலோரிகள், 1 கிராம் புரதம், 21 கிராம் கார்போஹைட்ரேட், 77 கிராம் நீர்ச்சத்து உள்ளது.
பனங்கிழங்கில் பாதாமுக்கு இணையான சத்துக்கள் இருப்பதனால், உடல் பலவீனமாக இருப்பவர்கள், இந்த கிழங்கை சாப்பிடலாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
இந்தக் கிழங்கு ஆஸ்டியோபோரோசிஸ், ஆர்த்ரைடிஸ் (கீல்வாதம்) போன்ற எலும்புக் கோளாறுகளைத் தடுக்ககூடியது.
பனங்கிழங்கில் அதிக இரும்புச்சத்து இருப்பதால், ரத்தசோகையை நீக்கி, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலுக்கு சிறந்த உணவாகும்.
அதிக நார்ச்சத்து இருப்பதாலும், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதாலும் இந்த கிழங்கு சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்கின்றனர்.
அதேபோல இதில் உள்ள சில சத்துக்கள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் இந்தக் கிழங்கை அவ்வப்போது சாப்பிடலாம்.
பனங்கிழங்கு மாவுடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால், பெண்களின் கருப்பை வலுவடையும்.
பனங்கிழங்கு சாப்பிட்டால் சிலருக்கு வாயுத்தொல்லை வரலாம் என்பதால் பூண்டு சேர்த்துக் கொள்ளலாம்.
ஆரோக்கியமான உடலைப் பெற, பனங்கிழங்கை சமைக்கும் போது அதனுடன் மிளகு சேர்க்க வேண்டும். இல்லையெனில், உடலில் பித்தம் அதிகரிக்கும்.