திருநீற்றுப் பச்சை இலை செடியின் விதைதான் சப்ஜா. திருநீற்று பச்சை இலை துளசி இனத்தோடு சேர்ந்தது. சப்ஜா விதைகளில் கலோரிகள் குறைவாகவும், ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன.
அதேபோல், இந்த விதைகள் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. இவை அனைத்தும் எடை இழப்புக்கு அவசியமான தாதுக்கள் ஆகும்.
இச்செடியின் இலைகள் நறுமணம் கொண்டவை. மருத்துவ குணம் நிறைந்த இந்த இலைகளில் இருந்து கற்பூர மணம் கொண்ட நறுமணமிக்க எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.
சப்ஜா இலை உடலிலுள்ள தேவையற்ற நச்சு நீரை வியர்வையாக வெளியேற்றி விடும். இந்த இலைகளின் சாறை உடலில் பூசிக்கொண்டால் பூச்சிகள் எதுவும் நம்மை நெருங்காது. அனைத்து விதமான தோல் நோய்களுக்கும் இந்த இலைச்சாறு ஏற்றது.
சளி, தலைவலி மற்றும் சைனஸ் தொந்தரவால் மூக்கடைப்பில் இருப்பவர்கள் இந்த இலைகளை கைபிடி அளவு எடுத்து 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து அருந்த விரைவில் பலன் கிடைக்கும்.
சப்ஜா விதைகளை சாப்பிடுவதனால் நீண்ட நேரம் பசி உணர்வின்றி இருக்க முடியும். இதில் ஒமேகா 3 அமிலம் அதிக அளவில் இருப்பதால் உடலுக்கு தேவையான மெட்டபாலிச அளவை அதிகரித்து, உடலில் சேர்ந்துள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.
சப்ஜா விதைகளை நீரில் ஊற வைக்கும் போது, அவை செரிமான நொதிகளை உருவாக்கும். இந்த நொதிகள் செரிமானத்தை பலப்படுத்தும். அத்துடன் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தடுக்கும்.
இரவில் படுக்கும் முன் சப்ஜா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் ஊறவைத்த சப்ஜா விதையுடன் பால் மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடித்தால் உடல் சூடுக்கு மிகவும் நல்லது. மேலும் உஷ்ணத்தால் ஏற்படும் கண் எரிச்சல் குணமாகும்.
சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும்.
அரை ஸ்பூன் சப்ஜா விதைகளை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து பத்து நிமிடம் கழித்து ,அதனுடன் எலுமிச்சம் பழ ஜூஸை சேர்த்து மற்றும் தேன் ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்து எந்த குடித்து வர உடல் எடை குறைய வாய்ப்புள்ளது.