Sidhanathan K       May 03, 2024

தீரா நோயையும் தீர்க்கும் திப்பிலியின் மருத்துவ பயன்கள்..!!

திப்பிலி சுவையில் காரமாக இருந்தாலும் ஜீரணத்தின் முடிவில் இனிப்பாக மாறிவிடும். அதிக அளவில் எடுத்துக்கொள்ளாமல் சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இது குடல்வாயுவை போக்குவதோடு, வயிறு உப்புசத்திற்கும் மருந்தாக பயன்படுகிறது.

குழந்தைப் பேறு பெற்ற பெண்கள் வெதுவெதுப்பான நீரில் திப்பிலி பொடி கலந்து குடித்தால் ரத்தப்போக்கு, காய்ச்சல் குணமாகும்.

திப்பிலி லேகியம், சுவாசம், வயிற்று வலி, பெருங்குடல் பிரச்சனை மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

திப்பிலிப்பொடி மற்றும் கடுக்காய் பொடி சம அளவு எடுத்து தேனில் கலந்து, 1/2 ஸ்பூன் வீதம் காலை மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமாகும்.

திப்பிலிப் பொடியை பசும்பாலில் காய்ச்சி குடித்துவர, இருமல், வாயுத்தொல்லை மற்றும் வயிற்றுப்போக்கு குணமாகும்.

திப்பிலி பொடியை வெல்லத்துடன் 1:2 என்ற விகிதத்தில் கலந்து சாப்பிட்டால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். திப்பிலி பொடியை நெய்யில் கலந்து சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.

திப்பிலியை வறுத்து பொடியாக்கி அரை கிராம் அளவு எடுத்து, தேனில் கலந்து தினமும் 2 வேளை சாப்பிட்டு வர பசியின்மை நீங்கி வயிறு மற்றும் கல்லீரல் வலுப்பெறும்.

திப்பிலி, மிளகு, தோலுரித்த சுக்கு இவைகளை சம அளவு எடுத்து வறுத்து, அரை கிராம் தேனில் கலந்து 3 வேளை சாப்பிட்டு வர வயிற்றுவலி, தொண்டை கரகரப்பு குணமாகும்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories