Tap to Read ➤

அஜித் நடிக்க தவறவிட்ட மெகாஹிட் திரைப்படங்கள்!

அல்டிமேட் ஸ்டார் நடிக்க மறுத்த திரைப்படங்கள்..!!
Sidhanathan K
கோ (2011)

ஜீவா நடித்து கே.வி.ஆனந்த் இயக்கிய கோ திரைப்படத்திற்கு சூர்யா, சிம்பு ஆகிய இருவரிடமும் முதலில் கேட்கப்பட்டது. அவர்கள் இருவரும் மறுத்ததால் ஜீவா நடித்தார். ஆனால் அதற்கும் முன்னதாக அஜித்திடம் தான் நடிக்க கேட்கப்பட்டது.
நான் கடவுள் (2009)

இயக்குநர் பாலா தேசிய விருது பெற்ற நான் கடவுள் படத்தில் ஆர்யாவுக்கு முன்னர் அஜித் தான் நடிக்க ஒப்பந்தமானார். பல்வேறு காரணங்களால் அவரால் நடிக்கமுடியவில்லை.
கஜினி (2005)

மிரட்டல் என்ற பெயரில் அஜித், அசின் நடிப்பதாக இருந்த படம் தான் சூர்யா நடிப்பில் முருகதாஸ் இயக்கி மெகா ஹிட்டான கஜினி.
கில்லி (2004)

படத்திற்கான கதையை தரணி முதலில் அஜித்திடம் தான் கூறினாராம். ஆனால் தெலுங்கு ரீமேக் என்பதால் அஜித் நிராகரித்தார். பின்னர் விஜய் நடித்தார்.
காக்க காக்க (2003)

அஜித் நடிப்பதாக இருந்த அன்புச்செல்வன் கதாப்பாத்திரத்தில் தான் சூர்யா நடித்தார்.
சாமி (2003)

விக்ரம் நடித்து மெகா ஹிட்டான சாமி திரைப்படத்தில் நடிக்க முதலில் இயக்குநர் ஹரி அஜித்திடம் கேட்டுள்ளார். அஜித் மறுக்கவே விக்ரமை வைத்து இயக்கியுள்ளார்.
தூள் (2003)

தரணி இயக்கத்தில் விக்ரம், ஜோதிகா நடித்த தூள் படம், அஜித்திற்கு வந்த வாய்ப்பு விக்ரமிற்கு போக கமர்ஷியலாக ஹிட் கொடுத்தார் விக்ரம்.
ரன் (2002)

லிங்குசாமி இயக்கத்தில் தமிழில் வெளியான ரன் திரைப்படம் ஹிட்டானதால், தெலுங்கு, ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால் இதில் மாதவனுக்கு முன் அஜித்துக்கு தான் நடிக்க வாய்ப்பு சென்றிருக்கிறது.
ஜெமினி (2002)

“ஓ போடு” பாடல் மூலம் பட்டி தொட்டியெல்லாம் சென்றடைந்த ஜெமினி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு முதலில் அஜித்திற்கு தான் வந்திருக்கிறது.
நந்தா (2001)

சூர்யாவிற்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய நந்தா திரைப்படத்தில் அஜித் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை.
ஜீன்ஸ் (1998)

ஜீன்ஸ் படத்திற்கான கதை முதலில் அஜித்திடம் தான் சொல்லப்பட்டது. பிறகு பிரசாந்த் நடிக்க படம் இளசுகளின் மனதில் சிக்ஸர் அடித்தது.
லவ் டுடே (1997)

விஜய்க்கு அடித்த ஜாக்பாட் லவ் டுடே. ஆனால் இந்த கதையும் முதலில் அஜித்திடம் சொல்லப்பட்டது தான். அவருக்கு ஸ்கிரிப்ட் பிடிக்காமல் போக விஜய் நடித்தார்.
நேருக்குநேர் (1997)

முதலில் சூர்யாவிற்கு பதிலாக அஜித்திடம் தான் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஃபோட்டோக்கள் கூட வெளிவந்தன. அஜித் சில காரணங்களால் விலக சூர்யா என்ட்ரி கொடுத்துவிட்டார்.