Tap to Read ➤

கந்த சஷ்டி விரதத்தின் முறைகளும், பலன்களும்

முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் தலை சிறந்தது கந்த சஷ்டி விரதமாகும்.
HTML Tamil
முருகப் பெருமானுக்குரிய விரதங்களில் தலை சிறந்தது கந்த சஷ்டி விரதமாகும். 6 நாட்கள் கடைபிடிக்கப்படும் விரதம், சூரசம்ஹாரம் அன்று நிறைவடையும்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சஷ்டி விரதத்தை மேற்கொண்டால் நிச்சம் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
'சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்' என்ற பழமொழிக்கு அர்த்தம், சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் கரு வளரும் என்பது பொருள்.
கணவனும், மனைவியும் சேர்ந்து வாழவும், வீட்டில் செல்வம், ஒற்றுமை, சகல பாக்கியங்களும் பெருகவும் சஷ்டி விரதம் இருப்பது வழக்கம்.
6 நாட்கள் சஷ்டி விரதம் இருக்க முடியாதவர்கள் சூரசம்ஹாரம் நடைபெறும் கடைசி நாளில் விரதம் இருக்கலாம்.
விரதம் இருக்கும் 6 நாட்களிலும் காலை எழுந்தவுடன் குளித்து முருகப் பெருமானுக்கு பூஜை செய்யவேண்டும்.
சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கற்கண்டு அல்லது பழ வகைகள் என ஏதாவது ஒரு நைவேத்தியத்தை படைத்து பூஜை செய்ய வேண்டும்.
விரதம் இருப்பவர்களில் சிலர், வெறும் பால், பழம் மட்டுமே உட்கொண்டு விரதம் இருப்பதும் உண்டு.
மதியம் ஒருவேளை மட்டும் தயிர் சாதம் சாப்பிட்டு விட்டு விரதம் இருப்பவர்களும் உண்டு. விரதம் இருப்பது அவரவர் உடல் நிலையை பொறுத்தது.
மிகக் கடுமையாக விரதம் இருப்பவர்கள் தினமும் ஒரு மிளகு மட்டும் உண்டு விரதத்தை மேற்கொள்வார்கள்.
ஒருசிலர் விரதம் இருக்கும் 6 நாட்களும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று விரதத்தை கடைபிடிப்பதும் உண்டு
விரதம் இருக்கும் நாட்களில் கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் உள்ளிட்டவற்றை படித்து முருகப் பெருமானின் அருளைப் பெறலாம்.