இன்றைய வேகமான வாழ்க்கையில் சுவையோடு சேர்த்து ஆரோக்கியத்தையும் தரும் சிறுதானிய புட்டு அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சக்தி நிறைந்த உணவாக உள்ளது
வெறும் 10 நிமிடத்தில் சிறுதானிய புட்டு மிக்ஸ் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்
தேவையான பொருட்கள்: மக்காச்சோளம் -100 கிராம், வெள்ளைச்சோளம் -100 கிராம், கம்பு -100 கிராம், வெல்லம் -100 கிராம், தேங்காய் துருவல் - தேவைக்கேற்ப, நெய் -100 மில்லி
செய்முறை: மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், கம்பு ஆகியவற்றை சுத்தம் செய்து அரைத்துக்கொள்ளவும்
அரைத்த சிறுதானிய மாவில் தேவையான அளவு தண்ணீர் தெளித்து, பிசிறு பதமாக கலக்கவும். பின்னர் அந்த மாவை ஆவியில் வைத்து 10 நிமிடம் நன்றாக வேகவைத்து எடுக்கவும்
வேகாய்த புட்டில் வெள்ளம், தேங்காய் துருவல், நெய் சேர்த்து கலக்கவும்.சுவையும் மணமும் நிரைந்த சிறுதானிய புட்டு தயார்
உடலுக்கு தேவையான சக்தி மற்றும் சத்துக்கள் ஆகிய இரண்டும் தரக்கூடிய இந்த புட்டு வாரத்தில் ஒரு முறையாவது சேர்த்துக்கொள்வது மிக சிறந்த தேர்வாகும்