Tap to Read ➤

தினமும் அக்ரூட் பருப்புகள் சாப்பிடுவதால் உடலில் நிகழும் அற்புதங்கள் !!

வால்நட்டின் மருத்துவ பயன்கள்
Sidhanathan K
பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை, முந்திரி, வால்நட்ஸ் என அனைத்து நட்ஸ்களிலுமே ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன.
வால்நட்ஸில் கார்போஹைட்ரேட், புரோட்டீன், ஒமேகா-3, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்றவைகள் அடங்கியுள்ளன.
வால்நட்ஸில் உள்ள பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், அதிக நேரம் பசியுடன் இருப்பதைத் தடுப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன.
மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான அல்சைமர் நோய் வருவதைத் தடுக்கிறது.
உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கவும், எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
கொழுப்பு அமிலங்கள் நிறைந்த, வால்நட்ஸ் உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே தொப்பையை குறைக்க நினைப்பவர்களுக்கு இவை சிறந்த மருந்தாகும்.
இரத்தத்தில் மெலடோனின் அளவை அதிகரித்து நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவுகிறது.
இதில் உள்ள பயோட்டின் வைட்டமின் பி7 முடியின் வலிமையை அதிகரித்து, முடி உதிர்வை குறைத்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
வால்நட்ஸ் விந்தணுக்களின் தரத்தை அதிகரிப்பதுடன், விந்தணு இயக்கம் மற்றும் விந்தணு உருவகம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது.
முகத்தில் உள்ள சுருக்கங்களைத் தடுக்கிறது மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.
கர்ப்பிணிப் பெண்கள் வால்நட் சாப்பிடும்போது, உணவுகளால் ஏற்படும் அழற்சியை குறைத்து, குழந்தையின் மூளை மற்றும் குடல் வளர்ச்சிக்கு உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.