Tap to Read ➤

பறவைகளுக்காக தீபாவளியன்றும் பட்டாசு வெடிக்காத அதிசய கிராமம்..!!

பறவைகளை பாதுகாக்க பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்!
HTML Tamil
தித்திக்கும் தீபாவளி பண்டிகை, அக்டோபர் 24-ம் தேதி அன்று பொதுமக்கள் உற்சாகமாகக் கொண்டாட உள்ளனர்.
தீபாவளி கொண்டாட்டத்தின் அங்கம் வகிக்கும் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடித்தால் பண்டிகை காலம் மகிழ்ச்சியாக அமையும்.
பறவைகளை பாதுகாக்க, சீர்காழி அருகே தீபாவளி தினத்திலும் பட்டாசுகளை வெடிக்காமல் கிராம மக்கள் தவிர்த்து வருகின்றனர்.
பெரம்பூர் என்ற கிராமத்தில் உள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான பறவைகள் தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன.
குறிப்பாக ஏராளமான வவ்வால்கள் இங்குள்ள மரங்களில் வசிப்பதால் இப்பகுதியை வவ்வாளடி எனவும் அழைக்கின்றனர்.
வவ்வால்களை பாதுகாக்கும் பெரம்பூர் கிராம மக்கள், தீபாவளியில் பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை செய்துள்ளனர்.
வவ்வால்களை பாதுகாக்க, 3 தலைமுறைகளாக பெரம்பூர் கிராம மக்கள், தீபாவளி தினத்தன்று பட்டாசுகளை வெடிக்காமல் உள்ளனர்.
பறவைகள் குறித்த புரிதலை பெற்றோர்கள் ஏற்படுத்தி விடுவதால், சிறுவர்களும் பட்டாசு வெடிப்பதை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை.
வழக்கம்போல் இந்த ஆண்டும் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாட பெரம்பூர் கிராம முடிவு செய்துள்ளனர்.
பறவைகளை பாதுகாக்க, தீபாவளியிலும் பட்டாசு வெடிப்பதை தவிர்க்கும் பெரம்பூர் கிராம மக்கள், பாராட்டத்தக்க வேண்டியவர்கள்.