Tap to Read ➤

உடல் எடையை குறைக்க டயட் இருப்பவர்கள் செய்யும் தவறுகள் !!

டயட் இருப்பவர்கள் கவனிக்க வேண்டியவை !!
Sidhanathan K
பல மாதங்களாக டயட்டிற்கான பிளானை பின்பற்றியும் உடல் எடை குறையவில்லையே என்று பலர் வருத்தப்படுவதுண்டு.
அவ்வாறு அந்த அட்டவணைப்படி சரியாக பின்பற்றினோமா என்று கேட்டால் கேள்விக்குறி தான்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் டயட் பிளானை கடைபிடித்தால் போதும்.
காலை உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சிக்குப் பிறகு திட்டமிட்ட காலை உணவின்படி அளவோடு சாப்பிடாமல் டயட் இருப்பதை மறந்து அதிகமாகச் சாப்பிடுவது.
மாவுச்சத்துள்ள அரிசியைத் தவிர்த்து விட்டு, சர்க்கரை அதிகம் உள்ள பதப்படுத்தப்பட்ட ராகிப் பொருட்களைச் சாப்பிடுவது. அதீத சர்க்கரை, மாவுச்சத்தைக் காட்டிலும் ஆபத்தானது.
உடலில் புரதத்தை அதிகரிக்க பல்வேறு ப்ரோட்டின் ட்ரிங்க்ஸ் குடிப்பது. இதனால் அதீதப் புரதம் அடிவயிற்றில் கொழுப்பாக சேர்ந்து விடுகிறது.
டயட்டில் இருக்கும் சிலர் பழ ஜூஸில் சர்க்கரை அதிகமாக சேர்க்கின்றனர். சர்க்கரை சேர்க்காத ஃப்ரெஷ் ஜூஸ் அருந்துவது நல்லது.
டயட்டின்போது சிலர் இரவு தூங்காமல் வேலை செய்கிறார்கள். தூக்கமின்மை பசியை ஏற்படுத்தும். ஏனெனில் பசியைத் தூண்டும் ஹார்மோன்கள் தூக்கத்துடன் தொடர்புடையவை.
நம்மில் பலர் கொலஸ்ட்ரால் கெட்டது என்று நினைக்கிறோம். ஆனால் நல்ல கொலஸ்ட்ரால் உள்ள தானியங்கள், மீன்கள், நட்ஸ், ட்ரை ப்ரூட்ஸ் ஆகியவற்றை சாப்பிடலாம்.
வைட்டமின் மற்றும் சத்து மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் சாப்பிடுவது.
டயட்டின்போது மைதாப் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மைதா நீரிழிவு மற்றும் இதய நோய்கள் போன்ற பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.