Tap to Read ➤

கிரீன் டீ குடிக்கும்போது நாம் செய்யும் தவறுகள் !!

எப்படி தெரியுமா..?
Sidhanathan K
கிரீன் டீ எடை குறைப்பது முதல் இளமையை தக்க வைப்பது வரை பல விஷயங்களுக்கு உதவியாக இருக்கிறது.
சாப்பிட்ட பிறகு க்ரீன் டீ குடிக்கக்கூடாது. ஏனென்றால் உணவில் உள்ள புரதம் செரிக்காது.
வெறும் வயிற்றில் கிரீன் டீயை குடிக்கக் கூடாது மற்றும்மருந்து மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள் கிரீன் டீயுடன் உட்கொள்ளக்கூடாது.
ஒரு நாளைக்கு 3-5 கப் கிரீன் டீக்கு மேல் குடிக்கக்கூடாது. இது உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவதை குறைத்து தலைவலி, படபடப்பு மற்றும் சோம்பல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
டீயைப் போல க்ரீன் டீயை சூடாக குடிக்கக் கூடாது. சூடாக குடிப்பதால் தொண்டை மற்றும் வயிற்றில் எரிச்சல் ஏற்படும். பகிரீன் டீயைப் பொறுத்தவரை மிதமான சூட்டில் தான் குடிக்க வேண்டும்.
சூடான கிரீன் டீயில் தேன் சேர்க்க வேண்டாம்.. கிரீன் டீ வெதுவெதுப்பாக மாறிய பிறகு அல்லது ஆறிய பிறகு தேன் சேர்க்கலாம்.
கிரீன் டீ பொதுவாக சுவையாக இருக்காது என்பதால் சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. செயற்கையாக சுவையூட்டப்பட்ட கிரீன் டீயை பயன்படுத்த வேண்டாம்.
கிரீன் டீ பேக்குகளை அதிக நேரம் தண்ணீரில் கொதிக்க வைக்கக் கூடாது. இது சுவையை கசப்பாகவதோடு மட்டுமல்லாமல் நச்சுத்தன்மையையும் உண்டாக்கும்.
ஒரு கப் கிரீன் டீக்கு எந்த அளவு சரியானதோ அந்தளவு பயன்படுத்த வேண்டும். கூடுதல் நன்மைக்காக ஒன்றுக்கு மேற்பட்ட டீ பேக் அல்லது இலைகளை சேர்க்கக்கூடாது.
கிரீன் டீ இலைகள் அல்லது பேக்குகள், காற்று புகாத உலர்வான டின்களில் சேமிக்கப்பட வேண்டும். அப்போதுதான் சுவையாக இருக்கும்.