Tap to Read ➤

மூட்டு வலிக்கு நிவாரணியான முடக்கத்தான் கீரையின் பயன்கள் !

முடக்கத்தான் கீரையின் மருத்துவ பயன்கள் என்னென்ன ?
Sidhanathan K
ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் பல்வேறு வகையான கீரைகளில் முடக்கத்தான் கீரையானது பல்வேறு உடல்நலக் கோளாறுகளை நீக்கும் வல்லமை வாய்ந்தது.
கீரையை அரைத்து சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கு தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
தினமும் சிறிது பச்சையாக கீரை சாப்பிட்டு வந்தால் மூல நோய் மற்றும் நரம்பு தளர்ச்சி விரைவில் குணமாகும்.
முடக்கத்தான் கீரையை நல்லா அரைத்து காதில் சில துளிகள் விட காது வலி நீங்கும்.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு முடக்கத்தான் கீரை ஒரு நல்ல தீர்வாகும்.
கீரையை அரைத்து குழந்தை பெற்ற பெண்களின் அடிவயிற்றில் தடவி வந்தால் கருப்பையில் உள்ள நச்சுக்கள் நீங்கும்.
இக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் வாதத் தன்மை கட்டுப்பட்டு மூட்டு வலி நீங்கும்.
ஜலதோஷத்தால் ஏற்படும் தலைவலிக்கு, இலைகளை நன்கு பிழிந்து வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி குணமாகும்.
முடக்கத்தான் இலைகள் சேர்த்து செய்த எண்ணெய்யை தலையில் தடவினால் பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து தோசை செய்து சாப்பிடலாம்.