Tap to Read ➤

துபாயில் சொகுசு பங்களா வாங்கிய முகேஷ் அம்பானி

ரூ.1,353 கோடியில் துபாயில் முகேஷ் அம்பானி சொகுசு பங்களா வாங்கியுள்ளார்.
HTML Tamil
இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி, உலக பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, நாட்டின் 2-வது மிகப் பெரிய பணக்காரராவார்.
முகேஷ் அம்பானியும், அவரது குடும்பத்தினரும் அண்மைக் காலமாக வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு அவரது மகன் ஆனந்த் அம்பானி துபாயில் ரூ.664 கோடிக்கு சொகுசு பங்களா ஒன்றை வாங்கியிருந்தார்.
தற்போது முகேஷ் அம்பானி துபாயில் பிரம்மாண்ட சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.
துபாயின் ஜூமேரா தீவில் இந்திய மதிப்பில் ரூ.1,353 கோடியில் இந்த பிரமாண்ட பங்களாவை அவர் வாங்கியுள்ளார்.
குவைத் நாட்டைச் சேர்ந்த அல்ஷாயா குழுமத்தின் தலைவர் முகமது அல்ஷாயாவிடம் இருந்து முகேஷ் அம்பானி இதனை வாங்கியதாக கூறப்படுகிறது
துபாயில் மகன் ஆனந்த் அம்பானி வாங்கிய பங்களாவும், இந்த சொகுசு பங்களாவும் அருகருகே இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சொகுசு பங்களாவை, முன்பு வாங்கிய பங்களாவைவிட இரு மடங்கு விலை அதிகம் கொடுத்து முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார்.
இந்த சொகுசு பங்களாவில் உட்புறமும், வெளிபுறமும் நீச்சல் குளங்கள், பல்வேறு அறைகள் என ஏராளமான வசதிகள் இருப்பதாக தெரிகிறது.
கடந்த ஆண்டு, இங்கிலாந்தில் உள்ள 'ஸ்டோக்பார்க்' என்ற கிளப்பை ரூ.656 கோடிக்கு முகேஷ் அம்பானி வாங்கியது குறிப்பிடத்தக்கது.