Tap to Read ➤

முதலுதவி பெட்டியில் கட்டாயம் இருக்க வேண்டிய பொருட்கள்!!

அனைவரது வீட்டிலும் முதலுதவிப்பெட்டி அவசியம்!!
Sidhanathan K
முதலுதவி பெட்டி என்பது காயமடைந்த நபருக்கு முதலுதவி வழங்க சில அத்தியாவசிய மருத்துவப் பொருட்களைக் கொண்ட ஒரு பெட்டியாகும்.
இது அவசியம் எல்லா இடங்களிலும் இருக்க வேண்டிய பெட்டியாகும்.
காயத்தை தூய்மை செய்ய மென்மையான துணி
ரத்தக்கசிவு உள்ள இடத்தில் கட்டுபோட துணிச்சுருள்
காயத்தினை சுத்தம் செய்ய கிருமிநாசினி
முக்கோண வடிவில் சுற்றுவதற்கு பேண்டேஜ்
தீக்காயங்கள் ஏற்பட்ட இடங்களில் போடுவதற்கான கிரீம்
துணிகளை வெட்ட மற்றும் காயம்பட்ட இடத்தை சுற்றி இருக்கும் முடிகளை வெட்ட கத்திரிக்கோல்
முறிந்த எலும்பை இணைப்பதற்காக வைத்து கட்டப்படும் கட்டை
காகிதம், பென்சில் மற்றும் தெர்மோ மீட்டர்
சேனிடைசர் மற்றும் டார்ச்லைட்
சுத்தமான க்ளோவ்ஸ் (Gloves)
ஃபேஸ் மாஸ்க்