Tap to Read ➤

சென்னை வாசிகள் கட்டாயம் பார்க்கவேண்டிய சுற்றுலா தளங்கள்!

இதோ சுற்றுலா பற்றிய சிறிய தகவலுடன் !
varalakshmi n
மெரீனா கடற்கரை உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை ஆகும். இதன் நீளம் 13 கி.மீ. ஆகும். இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ளது,இந்திய மாநகரங்களில் ஒன்றான சென்னையின் கடல் எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது
செம்மொழிப் பூங்காசென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தாவரவியல் பூங்காவாகும். பெரிய பெரிய மரங்கள் சூழ்ந்துள்ள இடத்தில் தமிழக அரசு ரூ.8 கோடி செலவில் செம்மொழிப் பூங்காவை அமைத்துள்ளது. 700 வகையான தாவரங்களைக் கொண்டு ஊட்டி தாவரவியல் பூங்காவைப் போல செம்மொழிப் பூங்கா வடிவமைக்கப்பட்டிருக்கிறது
அறிஞர் அண்ணா
உயிரியல் பூங்கா
 'வண்டலூர் பூங்கா' என்றும் அழைக்கப்படுகிறது. இப்பூங்கா 1855ல் தோற்றுவிக்கப்பட்ட, 'இந்தியாவின் முதல் உயிரியல் பூங்கா'வாகும். இங்கு 170க்கும் மேற்பட்ட பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன உள்ளன
பழவேற்காடு ஏரி இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி.ஆற்று நீருக்கும் கடலுக்கும் இடைப்பட்ட பகுதியாக இந்த ஏரி விளங்குகிற
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் பகுதியும் மயிலாப்பூர் என வழங்குவதாகவும் கூறப்படுகிறது
தேசிய கலைக்கூடம் சென்னையின்
எழும்பூர் பகுதியில் அமைந்துள்ள,
இந்தியாவின் பழமையான கலைக்கூடங்களில்
 ஒன்றாகும் ,ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சத்தியவேடு என்னும் இடத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சிகப்புக் கற்களைக்கொண்டு 1906 ஆம் ஆண்டில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டது
கன்னிமாரா பொது நூலகம் இந்தியாவின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகும். 1890-இல் நிறுவப்பட்ட இந்நூலகத்தில் நாட்டின் மதிக்கத்தக்க, புகழ்பெற்ற பழமையான புத்தகங்கள் பாதுகாக்கப்படுகின்றன, சுமார் 6 லட்சம் புத்தகங்கள் உள்ளன
மாமல்லபுரத்தின் கடற்கரைக்கோயில்கள் இரண்டாம் நரசிம்மவர்மன் எனப்படும் ராஜசிம்மனால் கட்டப்பட்டவை. இரு பக்கத்திலும் கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியுமாக இரு சிவன் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.சுவரின் பல இடங்களிலும் பல்வேறு தெய்வச் சிற்பங்களும் புராண பாத்திரங்களும் காணக் கிடைக்கின்றனர்
சின்னமலை என்பது தமிழ் நாட்டின் சென்னை மாநிலத்தில் சைதாப்பேட்டை வட்டத்தில் அடையாறு ஆற்றின் கரையில் அமைந்த சிறிய குன்று ஆகும். இயேசுவின் பன்னிரு திருத்தூதருள் ஒருவரான புனித தோமா வாழ்ந்து கிறித்தவ மறையைப் பரப்பிய இடங்களுள் ஒன்றாக சின்னமலை கருதப்படுகிறது