Tap to Read ➤

மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட உலகின் மர்மமான இடங்கள் !!

திகிலூட்டும் மர்மமான இடங்கள்!!
Sidhanathan K
1. பிரேசிலில் உள்ள பாம்பு தீவு

ஆயிரக்கணக்கான கொடிய விஷபாம்புகள் உள்ள இந்த தீவிற்கு செல்ல அரசாங்கம் தடை விதித்துள்ளது.
உலகின் அதிக நச்சுத்தன்மை கொண்ட தங்க ஈட்டி தலை (Golden Spearhead) பாம்பு இங்கு காணப்படுகின்றன.
2. ரஷ்யாவின் பேய் நகரம்


ரஷ்யாவில் பேய்கள் மற்றும் அமானுஷ்யங்கள் நிறைந்ததாக நம்பப்படுகின்ற Mezgorye நகரம் தெற்கு யூரல் மலைகளில் உள்ளது. வெளியாட்களுக்கு ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது, எப்படி ஒரே இடத்தில் இப்படி ஒரு மர்ம இடம் வந்தது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
3. சுர்ட்சே தீவு

ஐஸ்லாந்துக்கு சொந்தமான இது 1963 மற்றும் 1967 க்கு இடையில் எரிமலை வெடிப்பு காரணமாக உருவான உலகின் புதிய தீவு ஆகும். பொதுமக்கள் இங்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழல் ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் மட்டுமே இங்கு செல்ல முடியும்.
4. கின் ஷி ஹுவாங் கல்லறை

சீனாவின் முதல் ஆட்சியாளரான Tomb of Qin Shi Huang-ற்கு சொந்தமான இந்த இடம் 1974 கண்டறியப்பட்டது. வரலாற்றாசிரியர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த கல்லறையை மிகவும் மர்மமானதாக கருதுகின்றனர்.
5. ஸ்வால்பார்ட் குளோபல் விதை பெட்டகம்

உலகில் உள்ள 100 மில்லியன் தாவரங்களின் விதைகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. இந்த பெட்டகம் பூகம்பங்கள் மற்றும் எந்த வகையான வெடிப்புகளாலும் பாதிக்கப்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பேரழிவு ஏதேனும் ஏற்பட்டால் இந்த விதைகளைப் பயன்படுத்தி உலகை மீண்டும் புதுப்பிக்க இயலும்.
6. போர்ட் நாக்ஸ் (Fort Knox)

அமெரிக்காவின் தங்க இருப்பில் பாதி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இடம். பல்வேறு பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தி மட்டுமே இந்த பெட்டகத்திற்கு செல்ல முடியும்.
இக்கட்டிடம் கான்கிரீட் கிரானைட் மற்றும் எஃகு மூலம் மூடப்பட்டு எந்த வகையான தாக்குதல்களிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறது.
7. ஐஸ் கிராண்ட் ஷிரின்

ஜப்பானில் உள்ள Ise Grand Shrine-இல் பூசாரிகள் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே செல்ல முடியும். இது சூரியன் மற்றும் பிரபஞ்சத்தின் கடவுளான அமதேராசுவின் நினைவாக கட்டப்பட்ட ஷின்டோ மதத்தின் முக்கியமான தளமாகும்.