Tap to Read ➤

விண்வெளியில் விண்கல்லை உடைத்த நாசாவின் டார்ட் விண்கலம்!!

எதற்காக என்று தெரியுமா ?
Sidhanathan K
நாம் வாழும் பூமியை போன்றே விண்வெளியிலும் பல்வேறு அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
விண்வெளியின் அதிசயங்களை நம் கண்முன் கொண்டு வர நாசா பல சாதனைகளை செய்து வருகிறது.
எதிர்காலத்தில் விண்கற்கள் பூமியை தாக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதனால் நாசா டார்ட் மிஷன் (DART) திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
டார்ட் மிஷன் என்பது பூமியை நோக்கி வரும் விண்கற்களை நாசாவின் டார்ட் விண்கலம் மோதி அதன் திசையை மாற்றி விடுவது தான்.
டிமோர்பாஸ் என்ற சிறுகோள் 2,500 அடி அகலம் கொண்ட டிடிமோஸ் என்ற சிறுகோளைச் சுற்றி வருகிறது.
நாசாவின் டார்ட் அதனை வினாடிக்கு சுமார் 15,000 மைல் வேகத்தில் தாக்கி அதன் சுற்றுப்பாதையை சிறிது திசை திருப்பும்.
அதாவது ஒரு சிறிய கார் அளவுள்ள டார்ட் விண்கலம் டிமோர்பாஸில் மோதி சிறிது சிறிதாக உடைத்து அதன் சுற்றுப்பாதையில் இருந்து மாற்றி விடும்.
இந்த சோதனையை செப்டம்பர் 27ம் தேதி அதிகாலை 4.44 மணிக்கு நடத்தி நாசா சாதனை படைத்துள்ளது.
மேலும் இந்நிகழ்வை நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது உலகின் முதல் கிரக பாதுகாப்பு சோதனையாகும்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த SpaceX ராக்கெட் மூலம் டார்ட் விண்ணில் ஏவப்பட்டது.
இந்த பயணத்திற்காக நாசா 325 மில்லியன் செலவிட்டுள்ளது.