இன்றைய காலத்தில் அனைவரும் இயற்கையாக அழகாக இருக்க விருப்புகிறார்கள். ரசாயன பொருட்களை தவிர்த்து வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி பாதுகாப்பாக அழகை பராமரிக்கலாம்.
சில எளிய குறிப்புகள் உங்கள் முகமும் உடலும் ஆரோக்கியமாகவும் பிரகாசமாகவும் இருக்க உதவும்.
பப்பாளி பழத்தை நன்றாக மசித்து முகம் கழுத்து மற்றும் கைகளில் தடவி 10 நிமிடங்கள் ஊறவைத்து, பிறகு நீரில் கழுவினால் முகம் அழகாகவும் மென்மையாகவும் இருக்கும்
வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ, ஆகியவற்றை சேர்த்து அரைத்து உடலில் தடவி குளித்து வந்தால் உடல் நிறம் தெளிவாகவும் சுத்தமாகவும் மாறும்
முகத்தில் கருமை மறைய, நன்னாரி வே, ஆவாரம்பூ, ஆலம்பட்டை ஆகியவற்றை எடுத்து கஷாயம் செய்து தினமும் காலை மாலை குடித்து வந்தால் முகத்தில் உள்ள கருமை மெல்ல குறையும்
இரவு படுக்கும் முன் பசும்பாலில் தேன், மஞ்சள்தூள், குங்குமப்பூ சேர்த்து குடித்தால் உடலில் இயற்கையான மினுமினுப்பு தோன்றும்
முகப்பரு வராமல் இருக்க, இஞ்சி துண்டுகளை எடுத்து சாறு பிழிந்து அதில் தேன் கலந்து பருக்கள் மீது தடவினால் 3 நாட்களில் பருக்கள் மறையும்
இயற்கையான முறைகளை தொடர்ந்து பின்பற்றினால், எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் உங்கள் அழகை நீண்ட காலம் ஆரோக்கியமான தோற்றத்தை பெறலாம்