Tap to Read ➤

பாலைவனத்தை அதிநவீன ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் நியோம் திட்டம் !!

சவூதி அரேபியாவின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் : மாசில்லா நகரம் !!
Sidhanathan K
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 2030-ம் ஆண்டுக்கு பிறகு டீசல் மற்றும் பெட்ரோல் கார்கள் விற்பனை செய்யப்படாது என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், 2017ஆம் ஆண்டு புதிய உலகளாவிய கனவுத் திட்டத்தை அறிவித்தார்.
பெல்ஜியம் அளவிலான பாலைவனத்தை நியோம் என்ற உயர் தொழில்நுட்ப நகரமாக மாற்றுவது தான் அந்த திட்டம்.
சவுதி அரேபியாவின் விஷன் 2030 திட்டத்தின் ஒரு பகுதியான இந்த நியோம் (Neom) நகரம் சுமார் 500 பில்லியன் டாலர் பொருட்செலவில் உருவாகிக்கொண்டிருக்கிறது.
சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தை மாற்றும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் இதுவரை 50 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பெரிய நகரம் நியூயார்க் நகரத்தை விட 33 மடங்கு பெரியதாக அமையும் என்று கூறப்படுகிறது. மேலும் இது 26,500 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது.
பறக்கும் ட்ரோன் டாக்சிகள், ஜுராசிக் பார்க் தீம் பார்க் மற்றும் மாபெரும் செயற்கை நிலவு ஆகியவை நகரத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நியோம் மெகா சிட்டியை உருவாக்க இதுவரை இரண்டு சிறிய நகரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
20,000 ஹவாய் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் இத்திட்டம் பணக்காரர்களுக்கு மட்டுமே பயன்படும் என்கின்றனர்.
திட்டத்தின் மற்றொரு பகுதி "தி லைன்" என்று அழைக்கப்படும் மற்றொரு பசுமை ஆற்றல் நிறைந்த பகுதியாகும். இது ஒரு நேர்கோட்டில் பரவியிருக்கும் நகரம்.
ஒரு நேர்கோட்டில் 105 மைல்கள் (170 கிமீ) நீண்ட இந்த நகரத்தில் கடைகள், பள்ளிகள் போன்ற மக்களுக்குத் தேவையான அனைத்தும் ஐந்து நிமிட நடை அல்லது மிதிவண்டியில் செல்லும் தூரத்திலேயே இருக்கும்.
கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தவுடன், இந்த நகரத்திற்குள்ளான பயணம் அதிவேக ரயில்கள் வழியாக இருக்கும் எனவும், மிக நீண்ட பயணம் 20 நிமிடங்களுக்கு மேல் ஆகாது எனவும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், உலகின் மிகப்பெரிய மிதக்கும் கட்டமைப்பாக, 7 கி.மீட்டருக்கு நீரில் மிதக்கும் நகரமான ஆக்ஸகான் (Oxacon) என்ற நகரமும் நியோமில் இருக்கும்.