Tap to Read ➤

அறிமுகமாகிறது ஒற்றை சார்ஜில் 510 கி.மீ செல்லக்கூடிய இ-சைக்கிள்..!!

இதன் விலை என்ன தெரியுமா ??
Sidhanathan K
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன.
குறிப்பாக எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், ஒட்டுமொத்த மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஓர் அட்டகாசமான இ-சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இ-சைக்கிள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 512 கிமீ வரை செல்லக்கூடியது.
R22 எவரெஸ்ட் இ-பைக்கை ஆப்ட்பைக் (OptBike) எனும் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
அதிகபட்சமாக 58 kmph வேகத்தில் செல்லக்கூடிய இந்த பைக்கின் எடை சுமார் 72 கிலோ ஆகும்.
கரடுமுரடான மலைச் சாலைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு, கார்பன்-ஃபைபர், சஸ்பென்ஷன் செட்-அப் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பேட்டரி நிலை, வேகம் மற்றும் ஓடோமீட்டர் போன்ற தகவல்களைக் காட்ட எல்சிடி திரை பொருத்தப்பட்டுள்ளது.
இந்த சைக்கிளின் விலை $18,900 அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் பதினைந்து லட்சம் ரூபாய் ஆகும்.
சாலைகள் இல்லாத பகுதிகளில் கூட பயணிக்க முடியும். இதற்காக சில முக்கிய சிகரங்களில் இ-சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.