Tap to Read ➤

ரயிலில் காலியான பெர்த் தகவலை உடனுக்குடன் அப்டேட் செய்யும் கருவி..!!

காத்திருப்புப் பட்டியல் பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை இந்திய ரயில்வே எவ்வாறு வழங்குகிறது ?
Sidhanathan K
ரயில் பயணத்தின் போது காலியாக இருக்கும் பெர்த்களைப் பற்றிய தகவல்களை வழங்கும் புதிய HHT சாதனத்தை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹாண்ட் ஹெல்டு டெர்மினல்ஸ் (Hand Held Terminals - HHT) பயணிகளுக்கு கன்பார்ம் டிக்கெட்டுகளைப் பெற உதவுகின்றன.
சராசரியாக, இந்த சாதனங்கள் தினசரி 7,000 க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு உறுதிப்படுத்தப்படாத டிக்கெட்டுகளுடன் இருக்கைகளை வழங்குகின்றன.
இந்த HHTகள் ஆப்பிள் ஐபாட் அளவில் உள்ளன. மேலும் இவை பயணிகளின் தகவல் மற்றும் முன்பதிவு விளக்கப்படங்களைக் கொண்டுள்ளன.
முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டைக் கொண்டுள்ள பயணிகள் கடைசி நிமிடத்தில் வராமலோ அல்லது பயணத்தை ரத்து செய்தாலோ காலியான பெர்த் HHT சாதனத்தில் காட்டப்படும்.
காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு ரயில்வே டிக்கெட் பரிசோதகர் (TTE) டிக்கெட் கன்பார்ம் செய்வதற்கு உதவுகிறது.
கடந்த நான்கு மாதங்களில், சராசரியாக 5,448 RAC பயணிகளும், 2,759 வெயிட்டிங் லிஸ்டில் உள்ள பயணிகளும் இந்த hht வழியாக பயனடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.