Tap to Read ➤

ரெப்போ வட்டி விகிதம் 4வது முறையாக ஏன் உயர்த்தப்பட்டது?

வட்டி விகித அதிகரிப்பினால் உண்டாகும் ஆபத்துகள் என்ன ?
Sidhanathan K
வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ விகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்தியுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதன் மூலம் தற்போது ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதத்தில் இருந்து 5.90 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நாட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவே வட்டி விகிதத்தை உயர்த்தியதாக இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
நடப்பாண்டில் இவ்வாறுவட்டி விகிதத்தை உயர்த்துவது நான்காவது முறையாகும்.
கடந்த மே முதல் தற்போது வரை மட்டும் 1.4% சதவிகிதம் வட்டி உயர்ந்துள்ளது.
இந்த நடவடிக்கையால் வங்கிக் கடன் பெறும் பலர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
ரெப்போ கடன் என்பது பல தனியார் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனாகும்.
வங்கிகளுக்கான ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளதால் கூடுதல் வட்டியை ஈடுகட்ட வங்கிகள் வட்டிச் சுமையை வாடிக்கையாளர்களின் மீது செலுத்தும்.
இதனால், வீட்டுக்கடன், வாகனக் கடன் மற்றும் பிற EMI வட்டி விகிதம் உயரும்.
ஏற்கனவே ரூபாய் மதிப்பு சரிவு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நமக்கு இது மிகவும் வேதனை அளிக்கிறது.