Tap to Read ➤

இந்தியாவில் புதிதாக திறக்கப்பட்ட மிக உயரமான சிவன் சிலை!

உலகிலேயே மிக உயரமான சிவன் சிலை எங்கு திறக்கப்பட்டுள்ளது தெரியுமா ?
Sidhanathan K
விஸ்வஸ் ஸ்வரூபம் என்று நம்பிக்கையின் வடிவமாக உருவாக்கப்பட்ட 369 அடி உயரமுள்ள இந்த சிலை உலகின் மிக உயரமான சிவன் சிலை என்று கூறப்படுகிறது.
ராஜஸ்தானின் உதய்பூரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாதத்வாராவில் கடந்த அக்டோபர் 29 அன்று 16 ஏக்கர் பரப்பளவில் சிலை திறக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டப்பட்ட சிலை 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் திறக்கப்பட்ட இச்சிலை 51 பிகாஸ் பரப்பளவில் மலை உச்சியில் தியான நிலையில் கட்டப்பட்டுள்ளது.
3 ஆயிரம் டன் எஃகு மற்றும் இரும்பு, 2.5 லட்சம் கன டன் மணல் மற்றும் கான்கிரீட் அதன் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
300க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையாக உழைத்த இந்த சிலையை 20 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும் என்றும் கூறப்படுகிறது.
இரவு நேரத்தில் இந்த சிலையை அனைவரும் பார்க்கும் வகையில் சிறப்பு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இச்சிலைக்குள் 4 லிப்டுகள், 3 வரிசை படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் பக்தர்கள் வசதியாக சிலையை கண்டுகளிக்க முடியும்.
மேலும் இந்த சிலை 250 ஆண்டுகள் நீடிக்கும் என்றும், மணிக்கு 250 கிமீ வேகத்தில் வீசும் காற்றைத் தாங்கும் திறன் கொண்டது என்றும் கூறப்படுகிறது.
இந்த சிலைக்கு அருகில் அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை சுற்றி மக்கள் பொழுதுபோக்கிற்காக பூங்காக்கள், சாகச சுற்றுலா வசதிகள் மற்றும் உணவு பூங்கா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.