Tap to Read ➤

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க சில கட்டுப்பாடுகள் அறிவிப்பு!!

என்னென்ன கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ?
Sidhanathan K
தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
அக்டோபர் 24-ம் தேதி தீபாவளியையொட்டி, மக்கள் கடைவீதிகளில் துணிகள் மற்றும் பல்வேறு பலகார பொருட்கள் வாங்குவது என்று குவிந்த வண்ணம் உள்ளனர்.
கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம்
குறைந்த ஒலி மற்றும் குறைந்த காற்று மாசு உள்ள பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற அமைதியான இடங்களில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
குடிசைப் பகுதிகளிலும், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களிலும் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.
அதேபோல் மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் திறந்த வெளியில் பொதுமக்கள் கூடி பட்டாசு வெடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவிப்பை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.