தமிழக அரசின் பொது இ-சேவை மையம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலக பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் செயல்பட்டு வருகிறது.
தமிழக மின்னணு நிறுவனம் மற்றும் தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக இ- சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன
இந்த நிலையில், இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை திட்டமிட்டு உள்ளது.
அதன்படி, இ சேவை மையங்களை DigiPay வரம்பிற்குள் கொண்டுவந்து பணம் எடுக்கும் வகையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் இ-சேவை மையங்களில் ஆதார் பயோமெட்ரிக் வாயிலாக வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த வசதி கிராமப்புற பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் இதுகுறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.